ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சினேகா..!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. அனைத்து தொகுதிகளிலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்ய வரிசையில் காலையிலே நின்றனர். அனைத்து கட்சியினரும், தங்களது ஏஜென்ட் மூலம், அந்தந்த வாக்குச்சாவடிகளில், தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். வாக்குச்சாவடியின் 100 மீட்டர் தூரம் வரை, போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சில பதற்றமான வாக்குச்சவாடிகளில் துணை ராணுவப்படையினருடன், தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் வாக்களிக்க, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் சினேகா.