வடமாநிலத்தவர்களை வைத்து கள்ள ஓட்டு – பாஜகவை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வடமாநிலத்தவர்களை வைத்து கள்ள ஓட்டு – பாஜகவை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Spread the love

வட மாநிலத்தவர்களை வைத்து பாஜக கள்ள ஓட்டு போட முயற்சி செய்த போது, பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகம் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: துறைமுகம் தொகுதியில், வட மாநிலத்தவர்களை வைத்து, பாஜக கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, பொது மக்கள் திடீரென சாலையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டன.

சென்னை துறைமுகம் தொகுதியில், திமுக சார்பில், பி.கே, சேகர்பாபு, அதிமுக கூட்டணி பாஜக சார்பில், மனோஜ் பி,செல்வம் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது, பாரதி மகளிர் கலை கல்லூரி வாக்கு சாவடியில், குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் , மதியம் 3 மணிக்கு வாக்களிக்க வந்தனர், ஆனால், அவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என வாக்கு சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த மண்ணில் பிறந்த எங்களுக்கு, வாக்கு இல்லை என்கின்றனர். வட மாநிலத்தை சேர்ந்த பீகார்காரங்களை வைத்து, பாஜக கள்ள ஓட்டு போட முயற்சிக்கின்றனர் என கூறி சாலையில் வந்து நின்ற்னர். அவர்களிடம் துணை கமிஷனர் மகேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். போலீசார் கூறும் போது நிறைய வாக்காளர்கள் பெயர் இடம் பெறவில்லை. இங்கு வசிக்கும் வட மாநிலத்தவர்கள் பலருக்கு ஓட்டு இல்லை என்கிறார்கள் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *