திமுக வேட்பாளர் மீது தாக்குதல் – தொண்டர்கள் சாலை மறியல்

திமுக வேட்பாளர் மீது தாக்குதல் – தொண்டர்கள் சாலை மறியல்
Spread the love

கோவை, தொண்டாமுத்தூரில் வாக்கு சாவடியை பார்வையிட சென்ற திமுக வேட்பாளர் மீது தாக்குதல்
சாலைமறியலால் பரபரப்பு.

கோவை: தொண்டாமுத்தூரில், வாக்கு சாவடியை பார்வையிட சென்ற திமுக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதால் சாலை மறியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில், அதிமுக சார்பில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார், திமுக சார்பில் மாநில சுற்று சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி போட்டியிடுகிறார், இன்று , தனது சொந்த ஊரான திருப்பூருக்கு சென்ற சிவ சேனாதிபதி, தனது வாக்கை பதிவு செய்து விட்டு,தொண்டாமுத்தூருக்கு திரும்பினார்.

அங்கு, செல்வ புரம் அரசு பள்ளி வாக்கு சாவடியை பார்வையிட சென்றார்.அப்போது, திமுகவுக்கும், அதிமுக, பாஜகவிற்கும் இடையே தள்ளு முள்ளு  ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், சிவ சேனாதிபதி மீது தாக்குதல் நடத்தினர். அவர் காரில் ஏறி புறப்பட்டபோது துரத்தி சென்று விரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி, மறியலை கலைத்தனர். பின்னர், மாவட்ட கலெக்டரிடம் சிவ சேனாதிபதி தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *