புதுச்சேரியில் 7 மணி வரை 80.63 % வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் 7 மணி வரை 80.63 % வாக்குகள் பதிவு
Spread the love

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 80.63 சதவீத வாக்குகள் பதிவாகியள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, இன்று இரவு 7 மணி வரை நடந்தது.

புதுச்சேரியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதால், மாலை 7 மணி வரையில் 80.63 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏனாமில் 87.79 சதவீதமும், காரைக்காலில் 79.16 சதவீதமும், மாஹேவில் 72.86 சதவீத வாக்குகளும் பதிவாகின. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட492 பேர் வாக்களித்துள்ளனர்

தற்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகளில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து இயந்திரங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பிறகு, அறைகள் சீல் வைத்து பூட்டப்படும். அந்த வளாகத்தில் 3 ஷிப்டுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *