தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 71.79 % வாக்குகள் பதிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 71.79 % வாக்குகள் பதிவு
Spread the love

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், 71.79 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. வெயிலையும் கூட பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று தங்களின் வாக்குக்களை செலுத்தினர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில், சரியாக 7 மணியளவில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 7 மணி நிலவரப்படி 71.79 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தேர்தல் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். நாளை முதல் வாகன பரிசோதனை கிடையாது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னையில் 59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இன்று நள்ளிரவுக்கு பிறகே சரியான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும்,” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *