2024 -ம் ஆண்டுடன் அதிபர் பதவி நிறைவடைய உள்ள நிலையில் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் புதின்

2024 -ம் ஆண்டுடன் அதிபர் பதவி நிறைவடைய உள்ள நிலையில் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் புதின்
Spread the love

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் பதவியில் வரும் 2036ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் இருப்பார். 68 வயதாகும் புதின், முதன்முதலில் கடந்த 2000ம் ஆண்டு ரஷ்ய நாட்டின் அதிபர் பதவியை ஏற்றார்.
அவரது பதவிக் காலம் வரும் 2024 ல் நிறைவடைகிறது. இந்நிலையில், 2036 ம் ஆண்டு வரை தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புதின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷ்ய நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது.
இந்தச் சட்டத்தை மாற்றி, ஒருவர் நான்கு முறை வரை தொடர்ந்து அதிபர் பதவியில் இருக்கும் சட்டத்தை புதின் கடந்தாண்டு முன்மொழிந்தார். இது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து இந்தச் சட்டத்திற்கு புதின் நேற்று ஒப்புதல் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *