டெல்லியில் ஊரடங்கு அமல் – வரும் 30ம் தேதி வரை தொடரும்

டெல்லியில் ஊரடங்கு அமல் – வரும் 30ம் தேதி வரை தொடரும்
Spread the love

கொரோனா தொற்று பரவலை தடுக்க டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நமது நாட்டில் உடுருவிய கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து, ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்தனர். பின்னர், பல்வே தடுப்பு நடவடிக்கைக்கு பின் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தவேளையில், இந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியதும், கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியது. தினமும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதைதொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்த் துவங்கியுள்ளதால், பல மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *