வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பில் உறுதி வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பில் உறுதி வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
Spread the love

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில், 71 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளாக கூறப்படுகிறது. அதில், அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சியிலும், குறைந்தப்பட்சமாக சென்னையிலும் வாக்குப்பதிவு நடந்ததாக தெரிகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம், பழுதாகி, வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அந்த பழுது சரி செய்த பின்னர் வாக்களித்தனர்.
குறிப்பாக நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வேளச்சேரி, ஆர்கே நகர் உள்பட சில இடங்களில் மர்மநபர்கள் சிலர், மாநகரட்சி அதிகாரிகள் என கூறி, வாக்குச்சாவடி மையத்தில் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை திருடி சென்றனர். அவர்களை அதிகாரிகள், பொதுமக்கள் உதவிடன் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதனால், பல இடங்களில் பரபரப்பு நிலவியது. மேலும், சில இடங்களில் குறிப்பிட்ட சின்னத்தில் வாக்குப்பதிவு செய்தால், வேறு சின்னத்தில் பதிவானதாக புகார் எழுந்தது. அதை அதிகாரிகளிடம், வாக்காளர்கள் தெரிவித்த பின்னரும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை.
தமிழக சட்டமன்ற தேர்த்லில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்த தலைமை தேர்தல் அதிகாரி, ஊழியர்களுக்கு பாராட்டுகள். மேலும் சென்னை, வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *