ரவுடி கொலையில் 3 பேர் கைது – கஞ்சா விற்பனையில் மோதல்

ரவுடி கொலையில் 3 பேர் கைது – கஞ்சா விற்பனையில் மோதல் Close up of male hands in bracelets behind back
Spread the love

சென்னை ஓட்டேரியில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன் விரோதத்தில், பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன் விரோதத்தில், பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் என தெரிந்தது.

சென்னை ஓட்டேரி எஸ்எஸ் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மதன் (23). ஆட்டோ டிரைவர். இருக்கு திருமணமாகி மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஓட்டேரி பாஷ்யம் தெருவில் ஆட்டோவை நிறுத்தி விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வந்த மர்மநபர்கள், அவரை மறித்து சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற மதனை, மர்மநபர்கள் விரட்டி சென்று வெட்டி கொலை செய்தனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

புகாரின்படி ஓட்டேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மதனை கொலை செய்தது ஓட்டேரியை சேர்ந்த சூர்யா (22), சக்திவேல் (20), கார்த்திக் (28) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து அவர்களை, போலீசார் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், சூர்யா கும்பலிடம், மதன் கஞ்சா வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்துள்ளார். ஆனால் வாங்கிய கஞ்சாவுக்கு உரிய பணத்தை முழுமையாக கொடுக்காமல் அரைகுறையாக கொடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக சூர்யா கும்பலுக்கும், மதனுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மதன் சரியாக பணம் தராததால், சூர்யா கஞ்சா தருவதை நிறுத்தி விட்டார். ஆனாலும் விடாமல் மதன், கஞ்சா கேட்டு சூர்யாவை நச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, மதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து சம்பவத்தன்று, மதனை கொலை செய்தார் என தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *