கொரோனா பாதிப்பில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் – மருத்துவமனையில் அனுமதி

கொரோனா பாதிப்பில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் – மருத்துவமனையில் அனுமதி
Spread the love

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. அதன்படி நேற்று ஒரேநாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,124 என அதிகரித்துள்ளது. 25,598 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 1,809 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,68,722 எனக உள்ளது. கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 15 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,804 என அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான ‘சகாயம் அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிட்டது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்தவேளையில் அவருக்கு, கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதனால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சகாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *