தேர்தல் விதிகளை மீறிய ஸ்ருதிஹாசன் – குற்றவியல் நடவடிக்கை எடுக்க புகார்

தேர்தல் விதிகளை மீறிய ஸ்ருதிஹாசன் – குற்றவியல் நடவடிக்கை எடுக்க புகார்
Spread the love

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனின் மகளும் , நடிகையுமான ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்தது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88,394 வாக்குச்சவாடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிகுகு நிறைவடைந்தது. தேர்தலில் வாக்களிக்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வாக்குசாவடிகளை பார்வையிட சென்றபோது, அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் உடன் சென்று இருந்தார். வாக்குசாவடிகளுக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து பிறர் செல்ல கூடாது என்ற நிலையில், வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்தார். இது விதிமீறல் என்பதால் அவர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக தலைமை ஏஜென்ட் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் ளித்துள்ளார். அந்த புகாரில், தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளபோது, தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ருதிஹாசன் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளார். இதுசட்டப்படி குற்றமாகும். தேர்தல் விதிமுறை மீறல் படி ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *