செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஒராண்டு சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஒராண்டு சிறை – நீதிமன்றம் தீர்ப்பு
Spread the love

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுக்கு தலா ஒராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ‘இது என்ன மாயம்’. படத்தின் தயாரிப்புக்காக ரேடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014ம் ஆண்டு ரூ.1.5 கோடி கடன் வாங்கினர். இந்த பணத்தை 2015ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திருப்பி தருவதாக உறுதியத்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை, அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் உத்தரவாதம் அளித்தனர்.

இந்நிலையில் கூடுதலாக ரூ.1 கோடி கடன் கேட்டு தியாகராயநகரில் உள்ள சொத்துக்களையும் ரேடியன்ஸ் நிறுவனத்திடம் அடமானமாக கொடுத்தனர். ஆனால் இந்த உத்தரவாதத்தை மீறி ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை இவர்கள் தயாரித்து வெளியிட்டதால் ரேடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ராதிகா, சரத்குமார் ஆகியோர் அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் பணத்தை திரும்ப செலுத்தவும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த ரேடியன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 7 காசோலைகள் திரும்ப வந்ததையடுத்து. இதைதொடர்ந்து 3 பேருக்கும் எதிராக ரேடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏ’க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு 2 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *