ஜார்ஜியா புறப்பட்டார் நடிகர் விஜய் – 65 படப்பிடிப்பில் பங்கேற்பு

ஜார்ஜியா புறப்பட்டார் நடிகர் விஜய் – 65 படப்பிடிப்பில் பங்கேற்பு
Spread the love

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் வாக்களித்துச் சென்றனர்.

இதில் நேற்று நடிகர் விஜய் தனது வாக்குகளை பதிவு செய்ய சைக்கிளில் சென்றார். அவர் சைக்கிளில் சென்று வாக்கு அளித்ததற்கு நெட்டிசன்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் விஜய் தரப்பில் இருந்து விஜய் சைக்கிளில் ஏன் சென்று வாக்களித்தார் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய், நேற்றிரவே ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் விஜய் இருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ’தளபதி 65’ படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

’தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *