70-வது உலக சுகாதார தினம் இன்று

70-வது உலக சுகாதார தினம் இன்று
Spread the love

உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகின்றது.

1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டு, ‘உலகளாவிய சுகாதார பாதுகாப்பு’ என்ற கருத்தின் அடிப்படையில், இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் சுகாதார பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, “மனிதனின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைவதே நல்ல ஆரோக்கியம் தான். உலக சுகாதார தினமான இன்று, நீங்கள் அனைவரும் சிறந்த ஆரோக்கியத்தில் இருக்கவும், புதிய உயரங்களை தொட்டு வளர்ச்சி பெறவும் இந்த நாள் அனுசரிக்கபட்டு வருகின்றது.

இந்நாளில், உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பளிக்கும் பணியைச் செய்ய உலக நாடுகளை உலக நலவாழ்வு அமைப்பு வலியுறுத்துகிறது.

மேலும், இந்த வருடத்தின் சுகாதார தினத்தின் தொனிப் பொருளாக நீரிழிவு நோய்த் தடுப்பு முன்னெடுக்கப்படுகின்றது. நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன இந்த வருட சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதிலும் 422 மில்லியன் பேர் நீரிழிவு தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு, ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், சுகாதாரம் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அதற்கு, அந்தந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். மனிதனே மனிதக்கழிவுகளை அள்ளும் நிலை ஒழிய வேண்டும். ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாடவேண்டிய உலக சுகாதார தினம் இன்று.

இது குறித்து, உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அடிப்படை கருத்தில் ‘அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் உலக சுகாதார பாதுகாப்பு அளிக்கப்படும்’ சுகாதாரத்திற்கான தேடலே எங்களை ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்னும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை உருவாக்க வழிவகுக்கும் என்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *