Spread the love
மேற்கு வங்க மாநிலத்தின் 31 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலையொட்டி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 வேட்பாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல் தொடரப்பட்டுள்ளது.
பலருடைய வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஹவுரா, ஹூக்ளி போன்ற மாவட்டங்களில் தேர்தல் மோதல்கள் வன்முறைகள் குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா மண்டலுக்கும் பாஜகவுக்கும் மோதல் வெடித்தது.
இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.