Spread the love
கொரோனா அச்சுறுத்தலால் மகாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால், ஜொமேட்டோ(Zomato)மற்றும் ஸ்விக்கி(Swiggy) நிறுவனங்கள் இரவு சேவையை நிறுத்தியுள்ளன.
இரவு 8 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரை உணவு ஆர்டர்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ள அந்த நிறுவனங்கள் இதுதொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தியுள்ளன.
மிக அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதையைடுத்து மகாராஷ்டிராவில் கடந்த 5ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.