Spread the love
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 28 டன் கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெல்ஜியத்தில் : ஆன்ட்வெர்ப் நகரில் உள்ள துறைமுகம் வழியாக மற்ற நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், சில நாடுகளில் இருந்து பெல்ஜியத்திற்குள் கொகைன் கொண்டு வரப்படுவதாகவும் கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் கடந்த பிப்ரவரி முதல் 6 வாரங்களில் ஒன்று புள்ளி 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள 28 டன் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஒரே நாளில் 11 டன் கொகைன் பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.