ரயில் நிலையத்தில் தவறவிட்ட ரூ.10 லட்சம் நகை – உரிய பயணியிடம் ஒப்படைப்பு

ரயில் நிலையத்தில் தவறவிட்ட ரூ.10 லட்சம் நகை – உரிய பயணியிடம் ஒப்படைப்பு
Spread the love

எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணி தவறவிட்ட ரூ,10 லட்சம் மதிப்பிலான நகைகளை கண்டெடுத்து, ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை : கன்னியாகுமரி, கணபதி புரத்தை சேர்ந்தவர் மதி கிருஷ்ணன்(48),இவர், தாம்பரம் ரயில்வே நிலையம் வருவதற்கு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார், அங்கு இறங்கிய மதி கிருஷ்ணன் , தான் கொண்டு வந்த ரூ,10 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்க நகைகள் இருந்த பையை மறந்துவிட்டார், சிறிது நேரத்தில், நகை பை ஞாபகம் வர , அங்குள்ள ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.

இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் , இன்று அதிகாலை ,5.50 மணிக்கு , 5வது நடைமேடையில் நின்றிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை முழுவதும் சோதனை நடத்தினர்,அதில், 3 ரயில் பெட்டியில், 74வது படுக்கையில், மதி கிருஷ்ணனின் நகை பை இருந்தது, அதை பார்த்தபோது, நகைகள் இருந்தன,உடனடியாக மதி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்து, நகையை ஒப்படைத்தனர், அவர்களுக்கு, மதி கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *