முக கவசம் அணியாவிட்டால் ₹5 ஆயிரம் அபராதம் – ராமதாஸ் ஐடியா

முக கவசம் அணியாவிட்டால் ₹5 ஆயிரம் அபராதம் – ராமதாஸ் ஐடியா
Spread the love

கொரோனா பரவலை தடுக்க வேண்டுமென்றால், முகக்கவசம் அணியாவிட்டால், ரூ,5 ஆயிரம் அபராதம் விதியுங்கள் என அரசுக்கு, ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக உள்ளது, நாம் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,  
 யாரும் எண்ணி பார்க்காத அளவிற்கு, 3645 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் தினசரி கொரோனா தொற்று பரவல், 450 ஆக குறைந்துள்ளது, ஏப்ரல் மாததில், கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்தோம்.ஆனால், கடந்த ஒரு மாதத்தில்,648 சதவீதமாக அதிகரித்து உள்ளது, கடந்த ஆண்டு, தினசரி கொரோனா பரவல் 562 லிருந்து,3645 ஆக அதிகரிக்க , 56 நாட்கள் ஆயின. ஆனால், 30 நாட்களில், இது அதிகரித்துள்ளது. நாம் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை காட்டுகிறது,
ஒரு புறம் 45 வயது மேற்பட்டோருக்கு, அனைவருக்கும் தடுப்பூசி, கொரோனா விதிகளை அரசு கடைப்பிடித்து வருகிறது.அனைவரும் முழு ஒத்துழைப்போடு, வைரஸ் பரவலை குறைத்து, நோயை முற்றிலுமாக நோயை போக்க முடியும், அதனால், ஊரடங்கு தேவையில்லை என தமிழக ஆர்சு கூறியுள்ளது.
பொது இடங்களில், கொரோனா பாதுகாப்பு விதியினை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து, தமிழக மக்களுக்கு, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால், சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளவர்கள் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதித்தல், சிறை தண்டணை அளித்தல் என கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *