மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை – மனைவி பிரிந்ததால் விரக்தி

மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை – மனைவி பிரிந்ததால் விரக்தி
Spread the love

தென்காசியில், இரண்டு முறை சாவை தொட்டவர், காதல் மனைவியை பிரித்ததால், மாடியில் இருந்து குதித்து , வாலிபர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சேந்தமரம், குல சேகர மங்கலத்தை சேர்ந்தவர் தவர் ராமர், இவரின் மகன் சுரேஷ்(25),இவர், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் ஆவார், இவரும், அதே பகுதி ராஜேஸ்வரி என்பவரும் காதலித்து வந்தனர். காதலிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினையில், சுரேஷ் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றார், ஒரு முறை மாடியில் இருந்து குதித்தார். இரண்டாம் முறை விஷம் குடித்தார்.
இந்த நிலையில், திருமணம் முடிந்த பிறகு, சுரேசுக்கும், ராஜேஸ்வரி ஆகியோருக்கு இடையில்,அடிக்கடி தகராறு ஏற்பட்டன. இதையடுத்து, ராஜேஸ்வரி, சுரேசை விட்டு பிரிந்தார், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார், சுரேஷ், தேனிக்கு சென்று வேலை பார்த்து வந்தார்.
நேற்று, ஓட்டுப்போட , சுரேஷ் , சொந்த ஊருக்கு வந்தார், அங்கு, ராஜேஸ்வரி சகோதரரிடம், தன் காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என்றார். இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டன, ராஜேஸ்வரி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார், உன்னுடன் சேர்த்து வைக்க முடியாது என , அவரை வீட்டுக்குள் தள்ளி பூட்டினர், ஆத்திரமடைந்த சுரேஷ், அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார், ஆபத்தான நிலையில், பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,அங்கு, அவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக சேந்தமரம் போலீசார்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *