மனைவி கழுத்தை அறுத்து கொலை – கணவனும் தூக்கிட்டு தற்கொலை

மனைவி கழுத்தை அறுத்து கொலை – கணவனும் தூக்கிட்டு தற்கொலை
Spread the love

அத்தை மகனுக்கு கேக் வாங்கி கொடுத்த சந்தேகத்தால், திருமணம் ஆன 44 நாளில், 19 வயது மனைவியை , கழுத்தறுத்து கொன்ற, 40 வயது கணவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் : கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ்(39), இவருக்கும், உறவுக்கார பெண்ணான மோனிஷா(19) என்பவருக்கு, , கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி நடந்தது, மோனிஷா , பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார், திருமணம் ஆகி, 44 நாளில், பலமுறை , மோனிஷாவுடன், தங்கராஜ் சந்தேகத்தின் பேரில், சண்டை போட்டு வந்தார், மேலும், மோனிஷா எந்த நேரமும், செல்போனில் பேசியபடி, சாட்டிங் செய்தபடி இருந்துள்ளார்.இது, தங்கராஜுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது, இந்த நிலையில், மோனிஷா தனியாக இருந்த போது, அத்தை மகன் வந்துள்ளார், அவனுக்கு, மோனிஷா கேக் வாங்கி கொடுத்தார். வெளியில் சென்றிருந்த தங்கராஜ் வீடு திரும்பினார்.

அப்போது, அத்தை மகன் வெளியேறினார். அத்தை மகனுக்கு கேக் வாங்கி கொடுத்தது குறித்து, மீனிஷாவிடம் சண்டை போட்ட தங்கராஜ், கேபிள் வயர் அறுக்கும் கத்தியால், அவரின் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர், தங்கராஜும் தூக்கில் தொங்கி உயிரைவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வயது வித்தியாசம் என்பது இங்கு பிரச்சினை இல்லை, கல்லூரி படிக்கும் மோனிஷா காதலில் விழுந்துள்ள போது, அவரை வலுகட்டாயமாக திருமணம் செய்து வைத்தவர்களே இந்த கொலைக்கு காரணமாக இருக்க கூடும் என கருத்து தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *