‘விக்ரம்’ படத்தில் இணைந்த ஃபகத் ஃபாசில்

‘விக்ரம்’ படத்தில் இணைந்த ஃபகத் ஃபாசில்
Spread the love

கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்துள்ளார் நடிகர் ஃபகத் ஃபாசில்.

சமீபத்தில் ‘ஃப்லிம் கம்பானியன்’ யூடியூப் சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஃபகத் ஃபாசில், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் தான் இணைந்துள்ள தகவலை தெரிவித்தார். இதையடுத்து, கமல் – ஃபகத் – லோகேஷ் காம்போவால் ‘விக்ரம்’ வலுபெற்றுள்ளது. இப்படத்தில் ஃபகத் வில்லனாக வரக்கூடும் எனத் தெரிகிறது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில், நடிகர் விஜய் சேதுபதியை போலவே மற்ற மொழி படங்களிலும் உறுதுணை கதாப்பாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், தென்னிந்தியா முழுக்க இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

கடந்த 2017 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தின் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பில் மிரட்டியவர், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’வில் வில்லனாக நடித்து வருபவர், மலையாளத்தில் மகேஷ்வரன் நாராயணன் இயக்கத்தில் ‘மாலிக்’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘இருள்’ படமும் கவனம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்துள்ள ‘ஜிஜோ’ படமும் நேர்மறை விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *