சென்னை, வேளச்சேரி பகுதியில், தாய் ஓட்டுப்போட சென்ற நேரத்தில், கர்ப்பிணி மகள் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
சென்னை ,வேளச்சேரி, வெங்கடேஷ்வரா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் நீலவேணி (60) இவரின் கணவர் கார்த்திகேயன். இவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நீலவேணியின் மூன்று மகள்களுக்கு திருமணம் நடந்து விட்டன, நீலவேணியின் மூன்றாவது மகள் ஷோபனா. இவருக்கும் வேளச்சேரி, விஜயநகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமாருடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது, ஷோபனா தற்போது, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார், நேற்று, நீல வேணி, ஓட்டுப்போட செனறார், வீட்டில் ஷோபனா தனியாக இருந்தார், ஓட்டுப்போட்டு வீட்டுக்கு அந்த நீலவேணி, ஷோபனா அறை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார், கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை, ஷோபனா துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இது தொடர்பாக தகவல் கிடைத்து, போலீசார் , ஷோபனா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர், அதில், ஷோபனா , கணவர் மற்றும் தாய் வீடு என மாறி, மாறி வந்து இருந்துள்ளார், இதில், மன வேதனையில் இருந்த ஷோபனா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்தது.