காணாமல் போன மகள் தனக்கு மருமகளாக வந்த சோதனை

காணாமல் போன மகள் தனக்கு மருமகளாக வந்த சோதனை
Spread the love

பீஜிங் : சீனாவின் சுஜோ நகரில் ஒரு பெண்மணியின் மகனுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. மருமகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் மருமகளின் கையில் இருந்த மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை மாமியார் கவனித்தார். பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்து உள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர். இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதார்.

மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார்.
அப்போது தான் அவர் தாயார் மீண்டும் ஒரு டுவிஸ்ட் வைத்தார். அதாவது, மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறினார். இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை என கூறிய நிலையில் மணப்பெண் மகிழ்ச்சியடைந்தார். இதன்பின்னர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *