மகள் காதலுக்கு எதிர்ப்பு – காதலனின் தந்தை கொலை… அப்பா வெறிச்செயல்

மகள் காதலுக்கு எதிர்ப்பு – காதலனின் தந்தை கொலை… அப்பா வெறிச்செயல்
Spread the love

காதலன் தந்தையை குத்தி கொன்று, தலைமறைவாக இருந்த மகளின் தந்தை , போலீசில் சரண் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி : புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்   தங்கவேல்(55), இவரின் மகன் பிரகாஷ்(25), இவர், டிரைவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம், இவரின் மகள் சந்தியா(23), ஆவார், பிரகாஷ், சந்தியா ஆகியோர் காதலித்து வந்தனர். சந்தியா செவிலியர் படிப்பு படிக்கிறார், கடந்த மாதம் 15 தேதி, சந்தியா காணாமல் போனார். கொங்கனாபுரம் போலீசில், செல்வம் புகார் கொடுத்தார்.போலீசார் விசாரனை நடத்தி, திருமணம் செய்ய அழைத்து வந்த சந்தியாவை, பிரகாசிடம் இருந்து மீட்டு, செல்வத்திடம் ஒப்படைத்தனர்.ஆனால், மீண்டும், கடந்த 29ம் தேதி மீண்டும் சந்தியா காணாமல் போனார்.

இது குறித்து கேட்க ,தங்கவேலு வீட்டுக்கு செல்வம் சென்றார், தன் மகளை , தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்கு, தங்கவேலு, செல்வத்திற்கிடையே வாக்குவாதம் முற்றியது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தங்கவேலுவை சரமாரியாக குத்தி கொன்றார். பின்னர், செல்வம் தலைமறைவாகி விட்டார்.அவரை போலீசார் தேடி வந்த நிலையில், செல்வம், திடீரென போலீசில் சரண் அடைந்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *