ஆபாசமாக பேசிய பென்ஜமின் – 2 பிரிவுகளில் வழக்கு

ஆபாசமாக பேசிய பென்ஜமின் – 2 பிரிவுகளில் வழக்கு
Spread the love

முகப்பேர் வாக்கு சாவடிக்கு வந்த அமைச்சர் பென்ஜமின், ஆபாசமாக பேசியதாக, அவர் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை : மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாக்கு சாவடி  மையம் அமைக்கப்பட்டிருந்தது, தேர்தல் நாளில், தமிழக அமைச்சரும், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளருமான பென்ஜமின், தனது ஆதரவாளர்கள் சுமார் 25 பேருடன்  வாக்கு சாவடி மையத்திற்கு வந்தார், அப்போது அங்கிருந்த  சில வாக்காளர்களை பென்ஜமின் தரப்பினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த திமுகவினர்,பென்ஜமினை கண்டித்துள்ளனர்.அப்போது பென்ஜமின் திமுகவினரை ஆபாசமாகவும்,அருவருக்க தக்க வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து முகப்பேர் மேற்கு பள்ளிக்கூடம் முதல் தெருவைச் சேர்ந்த  நவராஜ் (36), ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் பென்ஜமின் மீதும்,அவரது ஆதரவாளர்கள் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *