வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு – சென்னை கமிஷனர் தகவல்

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு – சென்னை கமிஷனர் தகவல்
Spread the love

சென்னையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

தமிழகத்தில், வாக்கு பதிவு முடிந்த நிலையில்,மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் , துணை ராணுவத்தினர் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்புடன், தமிழகம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீலிடப்பட்டன, இதை 24 மணி நேரமும்  சிசிடிவியில் கண்காணிக்கும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில்,234 சட்ட சபை தேர்தலும், கன்னியாகுமரி லோக் சபா இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது, இரவு 7 மணிக்கு வாக்கு பதிவு முடிந்த பிறகு, அந்தந்த வாக்கு சாவடிகளில் உள்ள இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சென்னையில், 16 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள்,லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பலகலைகழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன, இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் அளித்த பேட்டியில்,  மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுலள்ள மையங்களுக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.சென்னையில்,  நான்கு மையங்களில், வாக்கு எண்ண்ணும் பணி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மையங்களிலும், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *