அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்..!!

அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்..!!
Spread the love


இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் இரண்டாவது அலை பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கும் படியும், கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். ஏற்கனவே, அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில், பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாலேயே படப்பிடிப்பை, படக்குழு உடனடியாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *