இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக தடை – நியூசிலாந்து அறிவிப்பு..?

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக தடை – நியூசிலாந்து அறிவிப்பு..?
Spread the love

இந்தியாவிலிருந்து பயணிகள் நியூசிலாந்து வருவதற்கு அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.  

New-Zealand-Suspends-Entry-Of-Travellers-From-India-Amid-Covid-Surge

இந்நிலையில் தொற்று அதிகரிப்பு எதிரொலியாக, வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து பயணிகள்நியூசிலாந்திற்குள் வர அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வரும் தங்கள் நாட்டு குடிமக்கள் உள்பட அனைவரும் நியூசிலாந்திற்குள் வர அனுமதியில்லை என்றும் இந்தியாவிலிருந்து வருபவர்களில் பலருக்கு தொற்று உறுதியாவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *