ஆர்.கே.நகர் போல் மீண்டும் மக்களை ஏமாற்றிய அமமுக

ஆர்.கே.நகர் போல் மீண்டும் மக்களை ஏமாற்றிய அமமுக
Spread the love

தமிழகத்தில், நேற்று சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று கும்பகோணம் பகுதியிலுள்ள மளிகைக்கடை ஒன்றுக்கு வந்த பொதுமக்கள் வாக்குக்காக அ.ம.மு.க சார்பில் டோக்கன் கொடுத்ததாகவும், உங்களிடம் ரூ2,000-த்துக்கான மளிகைப் பொருள்களை வாங்கிக்கொள்ளச் சொன்னதாகவும் கூறி பொருள்களைக் கேட்டனர். இதில் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், `இந்த டோக்கன் போலியானது; இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ எனக் கூறியதுடன் கடைக் கண்ணாடியில் நோட்டீஸ் ஒட்டினார்.

இதனால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *