ரம்ஜான் தொழுகை இரவு 10 மணி வரை – முஸ்லிம் மக்கள் கழகம் வேண்டுகோள்

ரம்ஜான் தொழுகை இரவு 10 மணி வரை – முஸ்லிம் மக்கள் கழகம் வேண்டுகோள்
Spread the love

ரம்ஜான் மாதம் முடியும் வரை இரவு 10 மணி வரை தொழுகை முஸ்லிம் மக்கள் கழக தலைவர் கோரிக்கை.

ரம்ஜான் மாதம் முடியும் வரை, இரவு 10 மணி வரையில், மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி தர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ஏ.கே. தாஜூதின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக  தற்போது இரவு 8 மணிக்கு மேல் வழிப்பாடு நடத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களும் இரவு 9 மணிக்கு தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை  நடக்கும்.

அரசின் அறிவிப்பால் அது பாதிக்கும் சூழல் உள்ளது அதை நீக்க வேண்டும். ரம்ஜான் மாதம் முடியும் வரை இரவு 10 மணி வரை  தொழுகை நடத்த அனுமதி தர வேண்டும். மேலும் தமிழக அரசு தலைமை செயலருக்கும் கோரிக்கை அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *