கொரோனா பாதிப்புக்கு மக்களின் அலட்சியமே காரணம் – உயர்நீதிமன்றம் வேதனை

கொரோனா பாதிப்புக்கு மக்களின் அலட்சியமே காரணம் – உயர்நீதிமன்றம் வேதனை
Spread the love

கொரோனா வேகமாக பரவல், தடுப்பு நடவடிக்கைகளில் பொது மக்கள் காட்டும் அலட்சியம் என உயர் நீதி மன்றம் கவலை தெரிவித்துள்ளது.
 
வழக்கு ஒன்றின் விசாரணைக்கு தலைமை நீதி பதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான  அமர்வு முன் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்  விஜய் நாராய்ணன் காணொலி மூலம் ஆஜராகி இருந்தார்.
அப்போது, தலைமை நீதி பதி தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதை மிக தீவிர பிரச்சினையாக கருத வேண்டும். ஆனால் எந்த விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை பொது மக்களும் முகக்கவசம் அணிவதில்லை,  தனி மனித இடைவெளியும் பின்பற்றுவதில்லை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் , நோய் தாக்கத்தை  குறைக்கும் வகையிலும்,பொது மக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய் தடுப்பிற்கு தேவையான மாற்றத்தை  ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க அரசு முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார். இதில் பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர்  கொரோனா விதிகளால் பொது மக்கள் சோர்வடைந்து விட்டதாக தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி கவலை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இன்று பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்ட முடிவுக்கு பிறகு, தளர்வுகள் ரத்தாகும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *