போலீஸ் வருவதை அறிந்து ரூ.5 லட்சத்தை எரித்த தாசில்தார் – கொந்தளித்த மக்கள்

போலீஸ் வருவதை அறிந்து ரூ.5 லட்சத்தை எரித்த தாசில்தார் –  கொந்தளித்த மக்கள்
Spread the love

தெலுங்கானா : லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்து 5 லட்ச ரூபாய் பணத்தை தாசில்தார் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள எல்.பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட கவுடு. இவர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் உள்ள குவாரிக்கு அனுமதி பெறுவதற்காக வந்த நபரிடம் 6 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார அழைக்களித்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அந்த நபர் புகார் அளிக்க அவர்கள் அந்த நபரிடம் 5 லட்ச ரூபாய் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து அந்த நபரும் பணத்தை தாசில்தார் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருவதை அறிந்த தாசில்தார் உடனடியாக சமையலறைக்கு சென்று பணம் முழுவதையும் உடனடியாக தீவைத்து எரிக்க முயன்றுள்ளார்.

தாசில்தார் வீட்டில் பாதி எரிந்த நிலையில் உள்ள பணத்தை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இவரை கைது செய்து அழைத்து வரும் பொழுது இதனை அறிந்த பொது மக்களும் அவரை தாக்க முயன்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *