கூட்டாளியிடம் நகை பறிப்பு – திருடனுக்கு கத்தி குத்து

கூட்டாளியிடம் நகை பறிப்பு – திருடனுக்கு கத்தி குத்து
Spread the love

மது அருந்திய போதையில் கூட்டாளியிடம் செயின் பறித்த செல்போன் திருடனுக்கு கத்தி குத்து, காசிமேடு பகுதியில் பரபரப்பு.

சென்னை: காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில் மது அருந்திய போதையில், கூட்டாளியிடம் செயின் பறித்த செல்போன் திருடனுக்கு சரமாரி கத்தி குத்து விழுந்தது.

சென்னை, திருவொற்றியூர், அப்பர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ், இவரின் மகன் செல்வபதி(28),, ராஜா கடையை சேர்ந்தவர் ராஜீ, இவரின் மகன் சதீஷ்குமார்(23) இவர்கள் இருவரும் , நேற்று இரவு, நாராயண சாமி தெருவில் சோமு என்பவரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்தனர்.

பின்னர், காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில், இறால் மேடை எதிரில் உள்ள தனசேகர் மீன் செட்டுக்கு வந்தனர், அங்கு மீன் செட்டுக்குள் சங்கர் தூங்கிகொண்டிருந்தார். சங்கர் கதவை திறக்காததால் , மீன் செட்டை உடைத்து, செல்வபதி, சதீஷ்குமார் உள்ளே சென்று, அங்கேயே மது அருந்தினர்.

பின்னர், மதுப்போதையில், சதீஷ்குமாரின் கழுத்தில் இருந்த செயினை பறித்தார்,இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தில், செல்வதி கத்தியால் சதீஷ்குமாரை வெட்ட பாய்ந்தார், ஆனால், சதீஷ்குமார் கத்தியை பிடுங்கி, செல்வபதியை பல்வேறு இடங்களில் வெட்டினார், காலையில், சங்கர் புகாரின் பேரில், மீன் பிடி துறைமுகம் போலீசார், செல்வபதியை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர், சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *