லஞ்ச ஒழிப்புத்துறை 3 ஆண்டில் எத்தனை வழக்கை கையாண்டது – உயர்நீதிமன்றம் கேள்வி

லஞ்ச ஒழிப்புத்துறை 3 ஆண்டில் எத்தனை வழக்கை கையாண்டது – உயர்நீதிமன்றம் கேள்வி
Spread the love

கடந்த 3 ஆண்டுகளில், லஞ்ச ஒழிப்பு துறை எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டது 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் உயர் நீதி மன்றம் உத்தரவு.

 கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை  லஞ்ச ஒழிப்பு துறை கையாண்டுள்ளது என்பதை தமிழக அரசு, மூன்று   வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில்,கடந்த 2018 ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத 70 ஆயிரத்து 60 ரூபாய் பணம் பறிமுதல் செய்து, வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், தமிழக அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், 2019 ம் ஆண்டு, சார் பதிவாளர் கோபால கிருஷ்ணனை செங்கல்ப்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்தது, சட்ட விதிகளுக்கு புறம்பானது ,இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய தலைமை நீதிபதி அமர்வு, ‘‘புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது, நில அபகரிப்புகள் நடக்கிறது. நீர்நிலைகள் மாயமாகிறது என தெரிவித்த அவர்   தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர்,  அரசியல் கட்சிகளிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்படுகிறதா, கடந்த மூன்றுஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்பு துறை கையாண்டுள்ளது? என மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *