ஏப். 28ல் ரபேல் போர் விமானம் வருகை

ஏப். 28ல் ரபேல் போர் விமானம் வருகை
Spread the love

மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமான நிலையத்தில் நான்காவது தலைமுறை-பிளஸ் போர் ஜெட் விமானங்களின் இரண்டாவது படைப்பிரிவை மேம்படுத்துவதற்கான முதல் நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்), ஏப்ரல் 28’ஆம் தேதி இந்தியாவில் தரையிறங்கும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை இந்த படைப்பிரிவில் இணைக்க உள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் நான்கு போர் விமானங்கள் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 விமானங்கள் கோல்டன் அம்புகள் என்றும் அழைக்கப்படும் 17’வது படைப்பிரிவை முழுமையாக உயர்த்த இந்திய விமானப்படைக்கு உதவும். ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த மிக் 21 ஜெட் விமானங்களை ஐ.ஏ.எஃப் படிப்படியாக வெளியேற்றத் தொடங்கிய பின்னர் 2016’ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட ஸ்குவாட்ரானான இது, பிரெஞ்சு போர் விமானங்களை இணைக்கும் முடிவை எடுத்த பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் புதுப்பிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் எல்லைக்கு அருகே மூலோபாய ரீதியில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான விமான தளமான அம்பாலா விமானப்படை நிலையத்தில் இந்த படைப்பிரிவு அமைந்துள்ளது.

ஏப்ரல் 28’இல் புதிதாக இணைக்கப்படும் 6 விமானங்கள் கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவை நிறைவு செய்யும் என்று ஒரு மூத்த ஐ.ஏ.எஃப் அதிகாரி கூறினார். இது தற்போது 18 போர் விமானங்கள் இடவசதி கொண்ட நிலையில், 14 போர் விமானங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன.

இங்கு 4 விமானங்கள் இணைக்கப்படும் நிலையில் மீதமுள்ள இரண்டு விமானங்கள், மேற்குவங்கத்தில் உள்ள இரண்டாவது ரஃபேல் படைப்பிரிவில் இணைக்கப்படும். இதே போல் மே மாதத்தில் எதிர்பார்க்கப்படும் நான்கு விமானங்களும் மத்திய மற்றும் கிழக்கு திபெத்தை உள்ளடக்கும் ஹசிமாராவில் உள்ள படைக்கு அனுப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *