Spread the love
தண்டவாளத்தில், சிறுநீர் கழித்த 11 வயது சிறுவன் அடிப்பட்டு சாவு கொருக்குப்பேட்டையில் நடந்த பரிதாபம்.
சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், தண்டவாளத்தில் சிறு நீர் கழிக்கும் போது, கும்மிடிப்பூண்டி ரயிலில் அடிப்பட்டு, 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்,
சென்னை, கொருக்குப்பேட்டை, மீனம்பாள் நகரை சேர்ந்தவர் சரவணன், இவரின் மகன் சுமன்(11), 6ம் வகுப்பு படித்து வந்தான், இன்று காலை, ரங்க நாதபுரம் அருகில், தண்டவாளம் ஓரம் நின்று, சிறு நீர் கழித்துக்கொண்டிருந்தான் அப்போது, கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்றுக்கொண்டிருந்த ரயில் மோதிவிட்டு சென்றதில், சம்பவ இடத்திலேயே அடிப்பட்டு சுமன் பலியானான்.தகவல் கிடைத்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து வந்து சுமன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.