ரவுடியை கொல்ல முயற்சி தந்தை கண் முன்னே மகன் கொலை. ஓட ஓட விரட்டி பழி தீர்த்தனர் கோயம்பேடு பகுதியில் பரபரப்பு.
சென்னை: கோயம்பேடு பகுதியில், ரவுடியை கொல்ல முயற்சித்ததால் , தந்தை கண் முன்னே , மகனை ஓட ஓட விரட்டி கொன்று பழி தீர்த்த, நான்கு பேர் கும்பல் கைதாகினர்.
சென்னை, கோயம்பேடு, நெற்குன்றம், பட்டேல் சாலை, சக்தி நகரை சேர்ந்தவர் பிரம்ம தேவன், இவரின் மகன் நாராயணன்(25), இவர்கள், நேற்று இரவு அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு ஒருவரின் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழி மறித்தது, மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் , நாராயணனை ஓட ஓட விரட்டி கொன்றனர். இதை பார்த்த பிரம்ம தேவன் செய்வதறியாமல் திகைத்தார். அவர் கத்தி கூச்சலிட, அங்கிருந்த பொது மக்கள் ஓடி வந்தனர்.
அதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டனர் என தகவல் கிடைத்து. கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு , இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இன்று அதிகாலை இந்த கொலை தொடர்பாக மதுரவாயல், கந்தசாமி தெருவை சேர்ந்த சாரதி(19), நெற்குன்றம் செல்வா(19) மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்தனர், தனஞ்செயன் என்ற ரவுடியை நாராயணன் கொல்ல முயற்சித்ததால், அவரை பழி தீர்த்தது தெரியவந்தது.