சர்வீஸ் சென்டரில் தீ விபத்து – 16 கார்கள் எரிந்து நாசம்

சர்வீஸ் சென்டரில் தீ விபத்து – 16 கார்கள் எரிந்து நாசம்
Spread the love

கொளத்தூரில் இன்று அதிகாலை மெக்கானிக் சென்டரில் பயங்கர தீ 16 கார்கள் எரிந்து நாசமானது.

சென்னை: கொளத்தூர் பகுதியில் இன்று அதிகாலை, மெக்கானிக் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து , 16 கார்கள் எரிந்து நாசமாயின.

சென்னை: கொளத்தூர்,  எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்  சந்திரன்ராஜ், இவருக்கு  சொந்தமான கார் பழுது நீக்கும் மெக்கானிக் சென்டர்  உள்ளது. இந்த மையத்தில் நேற்று புதன்கிழமை இரவு நேரத்தில் வேலை முடிந்து, சந்திரன் மெக்கானிக் சென்டரை  பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

 இந்நிலையில் இந்த பழுது நீக்கும் மையத்துக்கு அருகே உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் இன்று  அதிகாலை 4 மணியளவில் தீப் பிடித்தது. இந்த தீ வேகமாக பழுது நீக்கும் மெக்கானிக் சென்டரிலும் பரவியது. இதனால் அங்கிருந்த கார்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைப் பார்த்த பொதுமக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் அம்பத்தூர், வில்லிவாக்கம், செம்பியம், மதுரவாயல், கோயம்பேடு ஆகியப் பகுதிகளில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததில், அதிகமான புகையும்,துர்நாற்றமும் வீசியது. இதன் காரணமாக தீயை விரைந்து அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் நிலைமையை சமாளித்து ,. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 16 கார்கள் எரிந்து நாசமாகியது. இந்த விபத்தினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பிளாஸ்டிக் கிடங்கு முற்றிலும் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து குறித்து கொளத்தூர் போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *