10 ரூபாய் வைத்தியர் காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

10 ரூபாய் வைத்தியர் காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
Spread the love

சென்னை : 10 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபால் உடல்நலக்குறைவால் காலமான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மருத்துவர் கோபால். இவர் தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படித் முடித்து, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பேராசியரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் கோபால், அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றவராக விளங்கினார்.

கடந்த 1969ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறியதாக கிளினீக் வைத்து நடத்திய மருத்துவர் கோபால், ஆரம்பத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். ஏழை மக்களுக்காக சிகிச்சை கட்டணத்தை பல வருடம் உயர்த்தாமல் சேவையாற்றினார்.

கடந்த 1976ஆம் ஆண்டு முதல் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய அவர், சில்லரை தட்டுப்பாடு காரணமாக மக்களே முன்வந்து 10 ரூபாய் வழங்கி மருத்துவர் கோபாலிடம் மருத்துவம் பார்த்து வந்தனர்.

மக்களுக்காக 10 ரூபாய் மருத்துவர் பார்த்த கோபால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்காக இலவச மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளை வழங்கினார். சமீபத்தில் இவரது மனைவி மரணமடைய, வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது கிளீனிக்கில் தங்கி மருத்துவ சேவையாற்றினார்.

இப்படி தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காக அர்ப்பணித்த மருத்துவர் கோபால் உடல்நலக்குறைவால் இன்று உயிரிந்தார். அவருக்கு வயது 77. இதே வண்ணாரப்பேட்டையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவே இன்னும் மக்கள் மனதில் அழியாத நிலையில், 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கோபால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 thoughts on “10 ரூபாய் வைத்தியர் காலமானார்! பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

  1. Attrɑctive section of content. I just stumbled upon yoⅼur blog and in accession cɑpіtal to asseet that I get in fact enjoye account our blog posts.
    Anny wayy I will be subscrіbing to your augment annd even I acһievement yoս аccess consistently fast.

    Feel free tto visit my web blog; oregon payday loans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *