அசத்தும் BSNL.. ஜியோ, ஏர்டெல்லுக்கே சவால் விடும் திட்டம்..!

அசத்தும் BSNL.. ஜியோ, ஏர்டெல்லுக்கே சவால் விடும் திட்டம்..!
Spread the love

புதுடெல்லி: வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல வகையான சலுகைகளை வழங்குகின்றன. ஆனால் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் நேரடி போட்டியை அளிக்கிறது. BSNL-லின் மிக மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் 47 ரூபாய்க்கானதாகும். இந்த மலிவான ரீசார்ஜ் கூப்பனின் நன்மைகள் Airtel, Jio மற்றும் Vi ஆகியவற்றின் நிலையை மோசமாக்கியுள்ளன. பி.எஸ்.என் இன் மலிவான ரீசார்ஜ் திட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். 

BSNL-ன் 47 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாயை விட குறைவான பல திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் BSNL திட்டம் அவற்றை விட சிறந்ததாக உள்ளது. இந்த சிறிய ரீசார்ஜ் கூப்பனில், எந்தவொரு நெட்வொர்க்கிலும் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் இலவசமாக அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த திட்டத்தில் BSNL தினமும் 100 எஸ்எம்எஸ்-ஐ பயனர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. 50 ரூபாய்க்கும் குறைவான இந்த ரீசார்ஜில் வாடிக்கையாளர்கள் தினமும் 1 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த மலிவான ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 28 நாட்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *