ஐபிஎல் 2021: சேப்பாக்கத்தில் இன்று மும்பை-ஐதராபாத் பலபரிட்சை!!

ஐபிஎல் 2021: சேப்பாக்கத்தில் இன்று மும்பை-ஐதராபாத் பலபரிட்சை!!
Spread the love

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. மும்பை முதல் போட்டியில் பெங்களூருவிடம் வீழ்ந்த நிலையில், 2வது போட்டியில்,கேகேஆரை வீழ்த்தியது. பேட்டிங்கில் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ் பார்மில் உள்ளனர். டிகாக், பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, இஷான் கிஷன் தடுமாறி வருகின்றனர். பந்துவீச்சில் பும்ரா,போல்ட் வேகத்திலும், குர்னல் பாண்டியா, ராகுல் சாகர் சுழலில் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் மும்பை களம் காண்கிறது.

மறுபுறம் ஐதராபாத் முதல் போட்டியில், கொல்கத்தா, 2வது போட்டியில் பெங்களூருவிடம் வெற்றியை பறிகொடுத்தது. பந்துவீச்சு சிறப்பாக இருந்த போதிலும் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. வார்னர், பாண்டேவை நம்பியே பேட்டிங் உள்ளது. விஜய்சங்கர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவருக்கு பதிலாக வீரர் சேர்க்கப்படலாம். ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து இன்று வெற்றிகணக்கை ஐதராபாத் தொடங்குமா என எதிர்பார்த்து காத்திருப்போம். இரு அணிகளும் இதுவரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி தலா 8ல் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியில் 3ல் மும்பை, 2ல் ஐதராபாத் வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *