விக்ரம் பிரபுவின் அடுத்த படம் “பகையே காத்திரு”

விக்ரம் பிரபுவின் அடுத்த படம் “பகையே காத்திரு”
Spread the love

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் டாணாக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, அடுத்து நடிக்கும் படத்துக்கு பகையே காத்திரு என்று பெயரிடப்பட்டுள்ளது. கந்தன் ஆர்ட்ஸ் சார்பில் ராசி முத்துசாமி தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங், சென்னை போரூரில் தொடங்கியது. காக்கி என்ற குறும்படத்தை இயக்கிய ஏ.மணிவேல் இயக்குனராக அறிமுகமாகிறார். விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். மற்றும் சாய் குமார், வித்யா பிரதீப், வரலட்சுமி, சிவா ஷாரா, பாலா நடிக்கின்றனர்.

எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். கொச்சின், ஐதராபாத், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. விக்ரம் பிரபு கூறுகையில், ‘19 படங்களில் பார்க்காத என் கேரக்டரை இதில் பார்க்கலாம். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பில் பணியாற்றி வருகிறோம். பொன்னியின் செல்வன் படத்தில் என் தந்தை பிரபுவுடன் இணைந்து நடித்த காட்சியை மணிரத்னம் படமாக்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *