ஹிப்ஹாப் ஆதியுடன் இணையும் ஷிவானி ராஜசேகர்!!

ஹிப்ஹாப் ஆதியுடன் இணையும் ஷிவானி ராஜசேகர்!!
Spread the love

இசை அமைப்பாளரும், பாடகரும், இயக்குனருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம், அன்பறிவு. அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். பேமிலி சென்டிமென்ட் நிறைந்த இப்படத்தில் நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், தீனா, காஷ்மீரா நடித்துள்ளனர். முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார். நெப்போலியனுடன் அவர் தோன்றும் காட்சிகள் முக்கிய அம்சமாக இருக்கும். ரஷ்யாவின் முக்கியமான பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. நடிகர் டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதி மகள் ஷிவானி ராஜசேகர் பங்கேற்ற காட்சிகள் ரஷ்யா பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியிலும் முக்கிய காட்சிகள் படமாகியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார். பொன் பார்த்திபன் வசனம் எழுத, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *