எம்ஜிஆர் மகன்: சசிகுமாருடன் மிருணாளினி ரவி?

எம்ஜிஆர் மகன்: சசிகுமாருடன் மிருணாளினி ரவி?
Spread the love

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கியுள்ள படம், எம்ஜிஆர் மகன். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இதில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ.கருப்பையா, சிங்கம்புலி, நான் கடவுள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், நமோ நாராயணன், சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோருடன் கவுரவ வேடத்தில் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்துள்ளார்.

யுகபாரதி, அந்தோணி தாசன், கடல்வேந்தன், முருகன் மந்திரம் பாடல்கள் எழுதியுள்ளனர். படம் பற்றி பொன்ராம் கூறுகையில், ‘சின்ன விஷயத்துக்காக பேசிக்கொள்ளாமல் இருக்கும் தந்தையும். மகனும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை. தந்தையாக சத்யராஜ், மகனாக சசிகுமார், தாயாக சரண்யா பொன்வண்ணன், தாய்மாமனாக சமுத்திரக்கனி நடித்துள்ளனர். எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம்.ஜி.ராமசாமி வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி என்ற கேரக்டரில் சசிகுமார் நடித்துள்ளார். படம் முழுவதும் அரைடவுசரில் வரும் அக்னி என்ற வித்தியாசமான கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *