இலக்கியாவை விடாது துரத்தும் ஹீரோ! மீண்டும் இணையும் ஜோடி!!

இலக்கியாவை விடாது துரத்தும் ஹீரோ! மீண்டும் இணையும் ஜோடி!!
Spread the love

டிக்டாக் புகழ் இலக்கியா ஹீரோயினாக அறிமுகமாகும் படம், நீ சுடத்தான் வந்தியா. கே.துரைராஜ் இயக்கியுள்ளார். ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. இலக்கியா ஜோடியாக அருண்குமார் நடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு சினிமா மீதும், நடிப்பின் மீதும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. உடனே கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடியிடம் நடிப்புப் பயிற்சி பெற்றேன்.

இப்படத்தில் நானும், இலக்கியாவும் நடித்துள்ள 3 பாடல்கள் இடம்பெறுகின்றன. அவருக்கும், எனக்கும் இது முதல் படம் என்பதால், நடிக்கும்போது நிறைய தயக்கம் இருந்தது. இது காதல் மற்றும் சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம். ரெட் டிராகன், ஆரி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது அடுத்த படத்தின் பணிகள் நடக்கிறது. இதில் ஐந்து ஹீரோயின்கள் நடிக்கின்றனர். என்னுடன் மீண்டும் இலக்கியா நடிக்கிறார்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *