அல்லு சிரிஷின்பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது; அல்லு அர்ஜுன் பாராட்டு!!

அல்லு சிரிஷின்பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது; அல்லு அர்ஜுன் பாராட்டு!!
Spread the love

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் ‘விலாய்த்தி ஷராப்’ யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், அல்லு அர்ஜுன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது முதன்முறையாக இந்தியில் சிங்கிள் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார்.

‘விலாய்த்தி ஷராப்’ என்ற தலைப்பு கொண்ட இப்பாடல், குறுகியகாலத்தில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், அல்லு சிரிஷின் இப்பாடலுக்கு இளைஞர்கள் நடனமாடி, டான்ஸ் கவர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தனது சகோதரர் அல்லு சிரிஷை மனம் திறந்து பாராட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.


அவர் கூறும்போது, ‘யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை தொட்டதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துகள். இசை ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. தர்ஷன் ராவல், நீதி மோகன், ஹெலி தருவாலா மற்றும் குழுவுக்கு எனது வாழ்த்துகள்’ என்றார். ஏபிசிடி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து, ஒக்கஷனம் ஆகிய படங்களில் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் நடனக்காட்சிகளை வழங்கிய அல்லு சிரிஷ், மலையாளத்தில் 1971: பியான்ட் பார்டர்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *