கிச்சா சுதீபின் ‘விக்ராந்த் ரோணா’ ஆகஸ்டில் வெளியீடு!!

கிச்சா சுதீபின் ‘விக்ராந்த் ரோணா’ ஆகஸ்டில் வெளியீடு!!
Spread the love

கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ள படம், விக்ராந்த் ரோணா. அவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இப்படம் பலமொழிகளில் உருவாகியுள்ளது. டைட்டில் லோகோ மற்றும் 190 நொடிகள் கொண்ட ஸ்நீக் பீக், உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் வெளியிடப்பட்டது.

ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ள இது, உலகம் முழுவதும் 55 நாடுகளில் 14 மொழிகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் அனூப் பந்தாரி கூறுகையில், ‘இப்படம் வழக்கமான தொழில்நுட்பத்திலும், 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. ஜாக் மஞ்சுநாத், ஷாலினி, அலங்கார் பாண்டியன் தயாரித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்க, வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீதா அசோக் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 19ம் தேதி படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *