3 மாத கர்ப்பிணியான மகளை சுட்டுக்கொன்ற தந்தை!!; போலீசில் சரண்

3 மாத கர்ப்பிணியான மகளை சுட்டுக்கொன்ற தந்தை!!; போலீசில் சரண்
Spread the love

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள சூளகுண்டா வரதேகவுண்டன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (60). இவரது மனைவி மாதவி(54). இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21). 3 மாத கர்ப்பிணியான வெங்கடலட்சுமி, தெலுங்கு வருட பிறப்பையொட்டி தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது கடந்த 14ம் தேதி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த அருணாசலம், மனைவியிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த அருணாசலம், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டார். இதை தடுக்க வந்த வெங்கடலட்சுமி மீது குண்டு பாய்ந்ததில் அவர் இறந்தார்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அருணாசலத்தை தேடி வந்தனர். 3 நாளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த அருணாசலம் நேற்று மாலை தளி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *