கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவருக்கு அடி – தடுத்த பெண்ணுக்கு சரமாரி உதை

கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவருக்கு அடி – தடுத்த பெண்ணுக்கு சரமாரி உதை
Spread the love

கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை சரமாரி தாக்கிய கும்பல் பெண்ணை அடிவயிற்றிலும் உதைத்தனர் கோயம்பேட்டில் பரபரப்பு.

சென்னை, கோயம்பேடு பகுதியில், கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை சரமாரியாக தாக்கிய கும்பல் ,பெண்ணின் அடிவயிற்றிலும் உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்பேடு , நெற்குன்றத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(30), இவர், காய்கறி வியாபாரி, இவரி மனைவியை , அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் கிண்டல் செய்தார், இதனை கேள்விப்பட்ட ராஜசேகர், லாரன்சை கண்டித்து,அவரை அடித்ததாக தெரிகிறது, இதனையடுத்து ஆத்திரமடைந்த லாரன்ஸ், நண்பர்கள்  விக்னேஷ், தினேஷ் உள்ளிட்ட   3 பேரை அழைத்துக்கொண்டு, ராஜசேகர் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர், தடுக்க வந்த , அவர் மனைவியை அடிவயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். இருவரும், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் , லாரன்ஸ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *